எம்ஆர்பி விலையில்தான் மதுபானம் விற்கப்படுகிறதா? – அறிக்கை கேட்கும் சென்னை ஐகோர்ட்

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என்று டாஸ்மாக் நிறுவனம் ஜூன் 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து…

By: Updated: May 27, 2020, 04:05:16 PM

தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என்று டாஸ்மாக் நிறுவனம் ஜூன் 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஜெயலலிதா சொத்துகளுக்கு தீபா, தீபக் தான் வாரிசு – ஐகோர்ட் உத்தரவு

அந்த மனுவில், டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு ரசீதுகள் கொடுப்பதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2003ம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்களை விற்க வேண்டும்… அதிக விலைக்கு விற்க தடை விதிக்க வேண்டும்… விலை பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மதுபானங்கள் கொள்முதல் செய்யும் போது தரமானதாக இருக்கிறதா என்று அரசு சரிபார்த்து கொள்முதல் செய்கிறதா? இதற்கு ஆதாரம் உள்ளதா? இதுவரை எப்படி கொள்முதல் செய்தீர்கள் என்று விளக்கம் அளிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

சென்னை மெட்ரோ எப்போது தொடங்கும்? முக்கிய அப்டேட்

மேலும், அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? மதுபானங்கள் விற்கும் போது, ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் விலைப்பட்டியல் ஒட்டப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கண்டுபிடிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக ஜூன் 25 ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tasmac sales mrp rate madras high court tn government

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X