புத்தாண்டு விடுமுறைக்கு புதிய டார்கெட் : டாஸ்மாக் போடும் பலே திட்டம்

கிறிஸ்துமஸ் தினத்தை விட புத்தாண்டு தினத்தில் அதிகளவு மது விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டாஸ்மாக் வட்டரங்களில் தெரிவி்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் மதுபானக்கடைகளில் (டாஸ்மாக்) வரும் புத்தாண்டு தினத்தில் ரூ 600 கோடிக்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. கிறிஸ்துமஸ் தினத்தில் பெற்ற வருமானமே இந்த நம்பிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது.

டாஸ்மாக் வட்டாரங்களின் அதிகராப்பூர்வமான தகவலின்படி, கிறிஸ்துமஸ் தினத்தில், எதிர்பார்த்த விற்பனையில் பாதியளவே விற்பனையானது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தயாரித்த மதுபானங்கள், அதிகளவில் விற்பனையாகவில்லை எனவும் கூறப்படுகிறது. அடுத்த வாரத்தில் வரும் புத்தாண்டு தினமே இதற்கு காரணம் என்ற நிலையில், புதுவருடத்தில் அதிக மது விற்பனையாகும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வரும் வெள்ளிக்கிழமை புத்தாண்டு தினம் கொண்டாடப்படவுள்ளது. ஆனால் இதற்கான கொண்டாட்டங்கள் வியாழன் கிழமை இரவே தொடங்கிவிடும் என்பதால், அன்றைய தினமே டாஸ்மாக் கடைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்றும், புத்தாண்டுக்கு அடுத்த நாள் சனி மற்றும் ஞாயிறு என்ற வழக்கமாக விடுமறை நாள் என்பதால், பெரும்பாலும் மதுவிற்பனை வியாழன் கிழமையே (டிசம்பர் 31) பாதி இலக்கை கடந்துவிடும் என கூறப்படுகிறது.  இதற்காக அனைத்து கடைகளிலும் மதுபாட்டில்கள் அதிகளவில் சேமித்து வைக்கப்பட்டுளன.

ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இரவு நேர புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் அதனுடன இணைக்கப்பட்ட பார்கள் என அனைத்தும், டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10 மணிக்குள்  மூட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானக்கடைகள் பெரும் வருமான இழப்பை சந்திக்க நெரிடும். மேலும் தனியார் பார்ட்டிகளுக்கு  மொத்தமாக மதுவாங்கும் சூழ்நிலை  உள்ளதால் சில்லரை விற்பனை வெகுவாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து தென்னிந்தியா ஹோட்டல் அண்ட் ரெஸ்டாரன்ட்ஸ் அசோசியேஷன் (சிஹ்ரா) செயலாளரும் ஜிஆர்டி ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியுமான டி நடராஜன் கூறுகையில், “அரசாங்க எஸ்ஓபி மதுக்கடைகளில் 50% மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவைபின்பற்றி, இரவு 10 மணிக்கு மேல் மதுபானம் வழங்கப்பட மாட்டாது என்று  விருந்தினர்களுக்கு அறிவித்தியுள்ளோம் என் று தெரிவித்துள்ளார்.”

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tasmac sales new target for new year celebraction tamilnadu

Next Story
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம்: இடம் பெறும் தொகுதிகள் எவை?Mayiladudurai inaugurated as 38th district in tamilnadu by eps tamil news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express