Advertisment

டாஸ்மாக் கடையில் துளையிட்டு திருட்டு: கொத்தாக தூக்கிய போலீஸ்!

திருவள்ளூரில் டாஸ்மாக் கடையில் டாஸ்மாக் கடையில் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்ததோடு, கடையிலேயே அமர்ந்து மது அருந்திய திருடர்களை காவலர்கள் கையும்-களவுமாக கைதுசெய்தனர்.

author-image
WebDesk
Sep 05, 2022 01:17 IST
Tasmac shop robbery

டாஸ்மாக்கில் திருட்டு முயற்சி

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.

இந்தக் கடையின் விற்பனையாளர் நேற்றுமுன்தினம் இரவு (செப்.3) வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், மர்ம நபர்கள் கடையை துளையிட்டு உள்ளே சென்று அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

Advertisment

மேலும் அங்கிருந்தபடி மது அருந்தியுள்ளனர். இதற்கிடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்.

,

அப்போது கடையில் துளையிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து கடைக்குள் இருந்தவர்களை அமைதியாக வெளியே வரும்படி கேட்டனர்.

போலீசாரின் பேச்சைக் கேட்டு பயத்தில் திருடர்கள் ஒன்றன் பின் ஒருவராக வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின.

போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிய வந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment