டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுப் பிரியர்கள் புகார்கள் கூறி வந்த நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மதுப் பிரியர்கள் புகார்கள் கூறி வந்தனர். அதனால், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டப் பகுதியில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில், மதுபானம் வாங்குபவர்களிடம் QR கோட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மதுப்பிரியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இது மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்க உதவு என்பதால், மதுப்பிரியர்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.
இதே போல, சென்னையில் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் உள்ள சுமார் 1000 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் பல டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி இல்லை என்று மதுப்பிரியர்கள் கூறுகிறார்கள். இதனால், மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் அதைத் தடுக்க அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியை முறையாக பயன்படுத்துகிறார்களா என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று மதுப் பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“