மதுபானக் கடைகளை காலையிலேயே திறக்க மக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று (ஜூலை 10) மதுவிலக்கு ஆயுத் தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி டாஸ்மாக் மண்டல மேலாளர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "டாஸ்மாக் பணியாளர்கள் பிரச்சனை குறித்து ஆலோசித்தோம். டாஸ்மாக் விற்பனைத் தொகையை டாஸ்மாக் பணியாளர்கள் வங்கிக்கு எடுத்து செல்லாமல், வங்கி அதிகாரிகளே பாதுகாப்பு வாகனங்களில் வந்து நேரடியாக பணத்தை பெற்றுக் கொள்ள முடியுமா என்பது குறித்து ஆலோசித்தோம்" என்றார்.
தொடர்ந்து, "துறை சார்பில் தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 40 மதுப்பியர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து 180 மி.லி மதுவை குடிப்பதற்காக காத்திருக்கின்றனர். 90 மில்லி லிட்டர் அளவு கொண்ட மதுபானம் வழங்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
90 மில்லி அளவில் டெட்ரா பேக்கில் மதுபானம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்" என்றார்.
மேலும், மதுபானக் கடைகளை காலையிலேயே திறக்க வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்துள்ளனர் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“