Advertisment

தமிழகத்தில் சனிக்கிழமை டாஸ்மாக் திறப்பு - குடிமகன்களுக்கு 7 நிறங்களில் டோக்கன்

Tasmac Shops Tamil Nadu: சிவப்பு, பச்சை, நீலம் என்று ஏழு வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது. அந்த நிறங்களுக்கு ஏற்பதான் மதுபானங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TASMAC, Tasmac open in tamil nadu, tasmac timing, tasmac tokens, tasmac shops near me, tasmac shops, டாஸ்மாக், டாஸ்மாக் திறப்பு, டாஸ்மாக் டோக்கன், டாஸ்மாக் திறப்பு நேரம், தமிழக அரசு

TASMAC, Tasmac open in tamil nadu, tasmac timing, tasmac tokens, tasmac shops near me, tasmac shops, டாஸ்மாக், டாஸ்மாக் திறப்பு, டாஸ்மாக் டோக்கன், டாஸ்மாக் திறப்பு நேரம், தமிழக அரசு

TASMAC: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு இருந்த சட்ட தடைகள் விலகின.

Advertisment

இந்த நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகள் நாளை திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டல பகுதிகளை தவிர பிற இடங்களில் கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகமும் மே 18 முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் - தமிழக அரசு

மேலும், சிவப்பு மண்டலங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படும். மது வாங்க வருபவர்களுக்கு வாகனங்களை நிறுவத்துவதற்கு உரிய இடம் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு, பச்சை, நீலம் என்று ஏழு வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது. அந்த நிறங்களுக்கு ஏற்பதான் மதுபானங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதில் எந்த சமரசமும் வேண்டாம்.

TASMAC : டாஸ்மாக் நாளை திறப்பு

கொரோனா தொற்று அதிகமுற்ற பகுதிகளை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது.

மது வினியோக கவுண்டர்களை அதிகரிக்க வேண்டும்.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பு இல்லை.

ஆகிய அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment