சென்னையில் நாளை (பிப்ரவரி 5-ம் தேதி) ‘டாஸ்மாக்’ கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அவர் கூறியுள்ளதாவது,

“வடலூர் ராமலிங்கர் நினைவுதினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து ‘டாஸ்மாக்’ கடைகளும், அனைத்து விதமான ‘பார்’களும் நாளை மூடப்பட வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்துள்ளார்.