மதுரை- திருச்சி செம்ம போட்டி: 2 நாள் டாஸ்மாக் கலெக்ஷன் எவ்ளோ கோடி தெரியுமா?

Tasmac sales : டாஸ்மாக் விற்பனையில், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்கள் யார் முதலிடம் பிடிப்பது என்ற கடும் போட்டியில் அந்தந்த மாவட்ட மதுப்பிரியர்கள் தங்களது மாவட்டங்களை முதலிடத்துக்கு கொண்டு வர முயன்று வருகின்றனர்.

Tasmac sales : டாஸ்மாக் விற்பனையில், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்கள் யார் முதலிடம் பிடிப்பது என்ற கடும் போட்டியில் அந்தந்த மாவட்ட மதுப்பிரியர்கள் தங்களது மாவட்டங்களை முதலிடத்துக்கு கொண்டு வர முயன்று வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tasmac, tasmac sales, tasmac revenue, tamil nadu government,madurai, corona virus, lockdown, tamil nadu, tasmac online sales, trichy, chennai, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

tasmac, tasmac sales, tasmac revenue, tamil nadu government,madurai, corona virus, lockdown, tamil nadu, tasmac online sales, trichy, chennai, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களிலும், விற்பனை ரூ.100 கோடிகளை கடந்துள்ள நிலையில், முதலிடத்துக்கு மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisment

கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இரண்டு கட்டங்களை முடித்து 3வது முறையாக நீட்டிக்கப்பட்ட நிலையில், மது விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. மாநிலத்தின் நிதி நெருக்கடியை கணக்கில் கொண்டு, கடந்த 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. உயர்நீதிமன்றமும் பல்வேறு நிபந்தனைகளுடன் அதற்கு அனுமதி அளித்தது. 7ம் தேதி வசூல் ரூ.150 கோடிகளை கடந்த நிலையில், மதுரை மாவட்டம் ரூ.34 கோடிக்கும் மேல் விற்பனை செய்து முதலிடம் பிடித்திருந்தது.

முகக்கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகள் சரிவர பின்பற்றப்படவில்லை எனக்கூறி மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து, ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

Advertisment
Advertisements

மேல்முறையீடு : உயர்நீதிமன்றத்தின் தடையுத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள், கடந்த 15ம் தேதி, உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, தமிழகத்தில் கடந்த 16ம் தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

முதல் நாள் ( 16ம் தேதி ) வருவாய்

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை 163 கோடி ரூபாய்

சென்னை மண்டலம் ரூ. 4.2 கோடி

திருச்சி மண்டலம் ரூ .40.5 கோடி

மதுரை மண்டலம் ரூ . 44.7 கோடி

சேலம் மண்டலம் - ரூ . 41.07 கோடி

கோவை மண்டலம் - ரூ . 33 .05 கோடி

இரண்டாம் நாள் ( 17ம் தேதி ) வருவாய்

நேற்றைய டாஸ்மாக் வருமானம் 133 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை வருமானத்தை காட்டிலும் 30 கோடி குறைந்து காணப்படுகிறது.

சென்னை - ரூ .5.6 கோடி

திருச்சி - ரூ .32.5 கோடி

மதுரை - ரூ .34.8 கோடி

சேலம் -ரூ . 29.6 கோடி

கோவை - 30.6 கோடி

டாஸ்மாக் விற்பனையில், மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்கள் யார் முதலிடம் பிடிப்பது என்ற கடும் போட்டியில் அந்தந்த மாவட்ட மதுப்பிரியர்கள் தங்களது மாவட்டங்களை முதலிடத்துக்கு கொண்டு வர முயன்று வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Madurai Trichy Tasmac

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: