சென்னை திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தர் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில் கூறியுள்ளதாவது, “சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், 15 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் 50 சதவீதம் பேர் மதுபானத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், தமிழநாடு மதுபான விற்பனை விதிகளின் படி, 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மது விற்கக்கூடாது. ஆனால், இந்த விதியை மீறி 21 வயது குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்ய நடத்தப்படுவதாகவும், விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை”, என்று தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், சென்னையில் நான்கு இடங்களில் மது விற்பனை இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 800 இடங்களில் இந்த இயந்திரங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் உள்ளதை தெரிவித்திருக்கிறார்.
இது, மாணவர்கள் மத்தியில் எளிதில் மதுபானங்களை பெறுவதற்கு வழிவகை செய்துவிடும், ஏனென்றால் அவர்களது வயதை சரிபார்த்து அவர்களுக்கு மது வழங்குவதற்கு எந்தவொரு கண்காணிப்பும் இல்லை என்பதால், இந்த தானியங்கி இயந்திரங்கள் மூலமாக விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த வழக்கை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளுக்கு உள்ளே தான் இந்த தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், அங்கு யார் வேண்டுமானாலும் மது வாங்கலாம் என்றும் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த தானியங்கி இயந்திரங்களில் மது பெற வருபவர்களை கண்காணிப்பதற்காக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil