கோலாகலமாக கடந்து சென்ற பொங்கல் : டாஸ்மாக் வருமானம் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வந்த வருமானத்தை விட இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் ரூ 20 கோடி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில், வருடத்தின் அனைத்து நாட்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். இதில் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் டாஸ்மாக் கடைகளின் வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கும். இதனால் மற்ற நாட்களை விட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளின் வருமானத்தை அதிகரிக்க டாஸ்மாக் நிர்வாகம் பல வழிகளில் முயற்சி மேற்கோண்டு வருகிறது.

இதில் சிலமுறை டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வெற்றியும், சிலமுறை தோல்வியும் கிடைத்துள்ளது. அந்த வகையில், கடந்த வாரம் தமிழகத்தில் கொண்டாடப்பட்ட தமிழரின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையில், டாஸ்மாக் கடைகளில் அதிக வருமானம் வரவேண்டும் என்ற நோக்கில் டாஸ்மான் நிர்வாகம் பல வழிகளில் முயற்சித்து தற்போது அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் டாஸ்மாக்கில் ரூ 590 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது கடந்த ஆண்டை விட 20 கோடி குறைவாகும். இதில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15 (வெள்ளிக்கிழமை) வருமானம் குறைந்த நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அரசுக்கு சொந்தமான சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் நடத்தப்படும் மதுபான விற்பனை கடைகளில், சனிக்கிழமை கிட்டத்தட்ட 172 கோடி வருமானம் வந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 38.1 கோடி ரூபாயும், திருச்சி ரூ. 36.1 கோடி மற்றும் மதுரை ரூ .36.6 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகயுள்ளது. இதில் கடந்த ஆண்டு, கானும் பொங்கல் அன்று 175 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. இதனால் காணும் பொங்கல் அன்று கடந்த ஆண்டை விட 3 கோடி ரூபாய் குறைந்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டில், ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய பொங்கல் நாட்களில் டாஸ்மாக் விற்பனை ரூ .30 கோடியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tasmac wine shop income details for pongal festival

Next Story
ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்கு செல்லுங்கள்… ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி அறிவிப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express