சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாட்களாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு நாளில், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் டாடா பவர்ஸ் நிறுவனம் நெல்லையில் ரூ. 70,800 கோடி முதலீடு செய்கிறது என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் உதலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜனவரி 7, 8 தேதிகளில் 2 நாட்களாக நடைபெற்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றுடன் நிறைவடைந்தது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 37 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6 லட்சத்து, 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடு இணைந்துள்ளது. இதன்மூலம், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேர்கள் நேரடி வேலைவாய்ப்பு பெறுவார்கள், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் தொழிற்துறை முதலீட்டில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி முதலீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
எரிசக்தி துறையில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி ரூபாய் முதலீடுக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதில், எந்த மாநிலத்திலும் செய்யாத அளவில் டாடா பவர்ஸ் நிறுவனம் நெல்லையில் 70 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. சோலார், காற்றாலை திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதுதான் ஒரு நிறுவனம் தமிநாட்டில் அதிகமாக முதலீடு செய்ய உள்ள மிகப் பெரிய தொகை ஆகும்.
*தூத்துக்குடியில் ரு. 36,238 கோடியில் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. புதிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மூலம் 1,511 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* அதே நேரத்தில், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், கள்ளக்குறிச்சியில் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ. 2 ஆயிரத்து 302 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலையால் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*பெரம்பலூரில் ரூ.48 கோடி மதிப்பில் அமையவுள்ள காலணி ஆலை மூலம் 150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
*எரிசக்தி துறையில் புதிய முதலீடுகளின் மூலம் 12,567 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எரிசக்தி துறையில் புதிய முதலீடுகள் மூலம் 18,000-க்கும் மேற்பட்ட மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக மேற்கொள்ளப்படும்.
*சி.பி.சி.எல் நாகையில் பெட்ரோகெமிக்கல் திட்டத்திற்கு ரூ. 17 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
*ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ. 100 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 1,500பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
*மஹேந்திரா நிறுவனத்துடன் ரூ1,800 கோடி புரிந்துணர்வு ஒப்பந்த முதலீட்டின் மூலம், 4,000 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
*சென்னையில் L&T நிறுவனம் ரூ. 3,500 கோடியில் ஐடி பார்க் அமைக்கிறது; 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு
*பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்க காவிரி மருத்துவமனை ரூ.1,200 கோடியில் ஒப்பந்தம்
போட்டுள்ளது.
*தமிழ்நாட்டில் ஜவுளித்துறையில் ராம்ராஜ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து. ராம்ராஜ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதால் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும்.
*தமிழ்நாட்டில் ஆச்சி மசாலா நிறுவனம் ரூ.100 கோடி முதலீடு செய்ய உள்ளது.
*தமிழகத்தில் அதானி குழுமம் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பசுமை எரிசக்தி துறையில் ரூ. 24,500 கோடி முதலீட்டின் மூலம் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
*லீப் கிரீன் எனர்ஜி நிறுவனம் ரூ.22,842 கோடி முதலீடு; செம்கார்ப் நிறுவனம் ரூ.36,238 கோடி முதலீடு செய்கிறது.போயிங் நிறுவனம் ரூ.300 கோடி முதலீடு
*ஷெல் மார்க்கெட் நிறுவனம் ரூ.1,070 கோடி முதலீடு; சிபிசில் நிறுவனம் ரூ.17,000 கோடி முதலீடு; 2,400 பேருக்கு வேலை.
*ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ரூ.3,000 கோடி முதலீடு; 2,000 பேருக்கு வேலை; சால்காம்ப் நிறுவனம் ரூ.2,271 கோடி முதலீடு.டஃபே நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு; 1,000 பேருக்கு வேலை; ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் ரூ.2,000 கோடி முதலீடு.
*ஹிந்துஜா குழுமம் ரூ.1,200 கோடி முதலீடு; 500 பேருக்கு வேலை; மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ரூ.2,740 கோடி முதலீடு.டாடா கெமிக்கல்ஸ் ரூ.1,000 கோடி முதலீடு; 500 பேருக்கு வேலை; ராம்கோ சிமென்ட் ரூ.999 கோடி முதலீடு செய்கிறது.
*அதானி குழுமம் ரூ.42,700 கோடி முதலீடு; பெங்களூரு ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் ரூ.1,000 கோடி முதலீடு; 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.