வரும் 2050 ஆம் ஆண்டில் உலகில் அதிக முதியோர் உள்ள நாடாக இந்தியா இருக்கும். இந்த முதியோருக்கு தேவையான வசதி வாய்ப்புகளை ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறை மூலம் ஈடு செய்யலாம் என டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில் மருத்துவமனையின் நிறுவனர் நாள் விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் பங்கேற்று புதிய இந்தியாவிற்காக ஆரோக்கியம் மற்றும் பாரம்பரியத்தை மறுவடிவமைத்தல் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மருத்துவமனையின் இயக்குனர் ராஜசேகரன் கங்கா மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாடா சன்ஸ் குழும நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் பங்கேற்று பேசியதாவது;
நாட்டில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் துறை வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இதில் மருத்துவ சார்ந்த துறை பெரும் பயனை பெறும் வகையில் ஏ.ஐ தொழில்நுட்பம் வருகிறது. வரும் 2050 ஆம் ஆண்டில் உலகில் அதிக முதியோர் உள்ள நாடாக இந்தியா இருக்கும். இந்த முதியோருக்கு தேவையான வசதி வாய்ப்புகளை ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் துறை மூலம் ஈடு செய்யலாம். அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
நாட்டில் தற்போது பெரும் சவாலாக உள்ள புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோயாக இருக்கிறது. இவற்றிற்கு தீர்வாக மருந்து கண்டுபிடிக்கும் சூழல் விரைவில் உருவாகும். புற்றுநோய் எந்த நிலையில் இருந்தாலும் அவற்றை இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மூலம் குணப்படுத்தலாம்.
விவசாயத் துறையிலும் அதிகமாக மகசூல் பெற ஒரே பயிர்களை பயிரிட்டு விலை குறையும் சூழ்நிலையை வீணாக்கும் சூழ்நிலையையும் புதிய தொழில்நுட்பங்கள் மாற்றி அமைக்கும். கால நிலைக்கு ஏற்ற விலைப் பொருள்களை உற்பத்தி செய்ய அரசுடன் சேர்ந்து ஏ.ஐ தொழில்நுட்பமும் வருங்காலத்தில் வரும் என்று கூறினார்
நிகழ்ச்சியில் நிறுவன நாள் குறித்த நினைவு பதக்கத்தை மருத்துவமனையின் இயக்குனர்கள் டாடா குழும தலைவருக்கு வழங்கி கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.