பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியர் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கத்தை அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் கண்ணன். இவர் தனது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆயுதபூஜை விடுமுறை முடிந்தது, சம்மந்தப்பட்ட மாணவி பள்ளிச் செல்ல மறுத்துள்ளார். பின்பு பெற்றோர்கள் மாணவியை தீவிரமாக விசாரிக்க, பின்பு ஆசிரியரின் நடவடிக்கை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியர் சாந்தகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்பு, ஆசிரியர் கண்ணன் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் தேடி சென்று, வகுப்பிலியே வைத்து சரமாரியக அடித்தனர். இதனால் அவர் பலத்த காயமடைந்தார்.
ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் பெற்றோரும் ஊர்மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. எந்தவொரு விசாரணையும் இல்லாமல் ஆசிரியரை தாக்கிய கிராம மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Teacher assaulted by public over molestation