ஆசிரியர் தகுதித் தேர்வு தேதிகள்: தமிழக அரசு அறிவிப்பு

ரத்து செய்யப்பட்ட பாலிடெனிக் விரிவுரையாளர் தேர்வு, ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும்

வரும் அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என இரு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான முதல் தாள் அக்டோபர் 6ஆம் தேதியும், இரண்டாம் தாள் 7ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இது குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் எனவும், அக்டோபரில் நடக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரத்து செய்யப்பட்ட பாலிடெனிக் விரிவுரையாளர் தேர்வு, ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என்றும் இத்தேர்வு நீதிமன்ற தீர்ப்புக்குட்பட்டது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 57 தொடக்க கல்வி உதவி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு செப்டம்பர் 15 -ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும், 25 வேளாண்மை பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 14 -ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரத்து 883 உதவி ஆசிரியர்களுக்கான பணியிடங்களுக்கு, ஜூன் 2வது வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Teachers education test date announced

Next Story
பிளவுபட்ட அதிமுக-வை இணைக்க முயற்சி… நாளை மறுநாள் இரு அணிகளும் பேச்சுவார்த்தை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com