பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், நாளை (அக்.13) மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில் 11 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த 2 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதற்கிடையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், நாளை (அக்.13) மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
சுமார் 1 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் அரசு அதிகாரிகள் ஆசிரியர்களிடம் 3 மாதம் வரை காலஅவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 30 கோரிக்கைகள் வரை முன்வைத்துள்ளனர். கற்பித்தலுக்கு போதிய நேரம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் உள்ளன.
முன்னதாக, சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 10 நாள்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
அதேபோல், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“