Advertisment

சென்னையில் பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்; 600 பேர் கைது

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக் கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
teachers protest 3

சென்னையில் பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்கள் Image screeshot from Facebook/ Ashok Kumar Papanasam

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக் கல்வி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

சமநிலை வேலைக்கு சம ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில், சென்னை கல்லூரி சாலையில் உள்ள பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் அணி அணியாக திரண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த போலீசார் அவர்களை பள்ளி கல்வி அலுவலக வளாகத்திற்குள் நுழைய விடாமல் பிரதான கதவுகளை மூடி தடுத்தனர்.

அப்பகுதியில், நூற்றுக்கணகான போலீசார் குவிக்கப்பட்டு ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இருப்பினும், போராட்டக்காரர்கள் நுழைவு வாசலை முற்றுகையிட்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அதே போல, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜேக்) சார்பில் அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு பொதுச்செயலாளர்கள் ரங்கராஜன், முத்துச்சாமி, வின்சென்ட், பால்ராஜ், மயில், தாஸ் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அரசு பள்ளிகளுக்கு வழங்கும் உதவி போல உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment