இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்... பேச்சுவார்த்தையில் உடன்பாடு...

ஒரு நபர் ஊதியக்குழு அமைக்கப்பட்டு ஊதிய வேறுபாடுகள் களையப்படும் என்று கூறப்பட்டதால் வாபஸ்

ஒரு நபர் ஊதியக்குழு அமைக்கப்பட்டு ஊதிய வேறுபாடுகள் களையப்படும் என்று கூறப்பட்டதால் வாபஸ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Teachers Protest Chennai

Teachers Protest Chennai

Teachers Protest Chennai : இடைநிலை ஆசிரியர்களில் 2009ம் ஆண்டிற்கு முன்பும் பின்பும் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு நிறைய ஊதிய வேறுபாடு இருந்தது.  ரூபாய் 15,000 முதல் ரூபாய் 20,000 வரை ஊதியங்களில் வேறுபாடு இருப்பதைத் தொடர்ந்து, குறைந்த ஊழியம் பெற்று வந்த ஆசிரியர்கள், ஊதிய உயர்வைக் கோரியும், வேறுபாட்டைக் களையவும் கோரிக்கைகளை வைத்தனர்.

Second Grade Teachers Protest Chennai

Advertisment

இதற்காக கடந்த 24ம் தேதி முதல்வரை சந்திக்கும் திட்டமும் இருந்தது. ஆனால் அன்று முதல்வரை சந்திக்க இயலாத காரணத்தால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக சென்னையில் போராட்டம் நடைபெற்று வந்தது.

300க்கும் மேற்பட்ட ஆசிரியகள் போராட்டத்தின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே இரண்டு முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பள்ளிக்கல்வித் துறை தொடக்க கல்வி இயக்குநர் கருப்பசாமி 3 கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : போராட்டம் ஓயாது என எச்சரிக்கை செய்த ஆசிரியர்கள்

எழுத்துப் பூர்வமாக அரசு தரப்பில் இருந்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து

Advertisment
Advertisements

பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை இயக்குநர் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், ஒரு நபர் ஊதியக்குழு ஒன்றை அமைத்து, ஊதிய வேறுபாட்டினை களைய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில், ஆசிரியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

Teachers

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: