Teachers Protest in Chennai: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த மாதம் (செப்டம்பர்) 28ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். பல்வேறு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் இடத்திலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில், உண்ணாவிரதம் குறித்து ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்திவருகின்றனர்.
இதற்கிடையில், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக கட்டாயம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
முன்னதாக இது குறித்து பேசிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட், “தமிழக அரசு சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவோம்” என்று உறுதிப்பட தெரிவித்தார்.
இதனால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளியின் உத்தரவாதத்தை ஏற்க TET தரப்பு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய TET தரப்பு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“