scorecardresearch

ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்: அமைச்சர் பொன்முடி நேரில் சமரசம்

ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதற்கிடையே, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க அரசியல் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.

teachers protest

சென்னையில் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம் நேற்று 4-வது நாளாக நடந்து வந்தது. அவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பணிநியமனத்துக்கு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்துச்செய்யக்கோரி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, பணிநியமனத்துக்கு போட்டித்தேர்வு நடத்தும் முடிவை கைவிடும்வரை போராட்டம் தொடரும் என்று அச்சங்கத்தின் மாநில தலைவர் கபிலன்சின்னச்சாமி, துணை தலைவர்மு.வடிவேலன் அறிவித்துள்ளனர்.

போராட்டத்தையொட்டி டிபிஐ வளாகத்தில் பாதுகாப்புக்காக போலீஸார், ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு கடந்த 4 நாட்களில் 38 பேர் மயங்கினர். அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதற்கிடையே, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க அரசியல் கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, அமமுக சார்பில் அதன் துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர்சி ஆர்.சரஸ்வதி, அமைப்புச் செயலாளர் ம.கரிகாலன் உள்ளிட்டோர் நேரில் வந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதனிடையே சென்னை டிபிஐ வளாகத்தில் 5வது நாளாக நீடித்த ஆசிரியர்களின் போராட்டம் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பொன்முடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Teachers protest in chennai political leaders support