scorecardresearch

ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: ஆய்வுக் குழு அமைப்பதாக முதல்வர் உறுதி

ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தை கணக்கில்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் சம வேலை, சம ஊதியம் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய ஆய்வுக் குழு அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில்  2009-ம் ஆண்டு மே மாதம்  31- தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒருவித சம்பளமும், 2009 ஜீன் 1-ம் தேதி சேர்ந்த இடை நிலை ஆசிரியர்களுக்கு ஒருவித சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில், ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்து 9 நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை நடைபெற்றும் அதற்கு பலனில்லை. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சம வேலை மற்றும் சம ஊதியம் தொடர்பன ஆசிரியர்களின் கருத்தை ஆய்வு செய்ய ஆய்வுக் குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். நிதித்துறை செயலாளர் தலைமையில் இக்குழு அமைய உள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை பரிசீலித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.    

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Teachers protest stalin says separate body will be formed