/indian-express-tamil/media/media_files/lgw4Ty8N4QVzdVcEyK1e.jpg)
தமிழகத்தில் திமுகவை ஆளவிட்ட எங்களை முதல்வர் ஸ்டாலின் வாழவிட மாட்டேங்கிறார் என்றும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு டெட் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 40,000 பேர் இருக்கும் நிலையில் இதுவரை அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆட்சிக்குவந்தால் உங்களுக்கு பணிவழங்குவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தார் (வாக்குறுதி எண் :177).
ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை பணி வழங்கப்படாததைக் கண்டித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் 400-க்கும் மேற்பட்ட டெட் ஆசிரியர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும், ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்ற 410 பேர் மட்டும் நீதிமன்றத்தைநாடி பணிவழங்க உத்தரவு பெற்றுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு பெற்றவர்களுக்கு மட்டும் இல்லாமல் தேர்ச்சிபெற்ற 40 ஆயிரம் பேருக்கும் பணி வழங்க வேண்டும், கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றாமல் தற்போது தேர்ச்சிபெற்று காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு நியமன தேர்வு என்ற அரசாணை எண் 149 -ஐ ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களை இந்த அரசு அரக்கத்தனமாக கையாள்கிறது என்பதனை சுட்டிக்காட்டும் விதமாக கொடூர முகமூடிகளை அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் வாக்குறுதியை நிறைவேற்று அல்லது வாக்களித்த எங்களை நாடு கடத்து என்றும், திமுக ஆட்சி அமையவேண்டும் என போராடியவர்கள், தமிழகத்தில் திமுகவை ஆளவிட்ட எங்களை முதல்வர் ஸ்டாலின் வாழவிட மாட்டேங்கிறார் என்றும் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆப்போட்டத்தில் கலெக்டர் அலுவலக சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.