புதுக்கோட்டையில் 17 வயது பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, மும்பைக்கு தப்பி சென்ற நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி – புதுக்கோட்டை இடையே உள்ள கீரணூா் கிராமத்தில் 17 வயது நபர் ஒருவர் தன்னுடன் படித்து வந்த அதே வயதுடைய பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும், அவரும் ஒரே பள்ளியில் படிக்கும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழகத்தினால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் தான், அந்த நபர் மும்பை தேடிவேலைக்கு செல்வதாக கூறி அந்த பெண்ணை ஏமாற்றி விட்டு மும்பைக்கு சென்றுள்ளார். அதன் பின்பு, பெண் கா்ப்பமாக இருப்பதை உணா்ந்த பெண் வீட்டாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இது குறித்து காவல் துறையினா் கூறுகையில், பெண் 9ம் வகுப்பும், ஆண் 10ம் வகுப்பும் படித்துள்ளனா். இருவரும் 18 வயது நிரம்பாத நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மைனர் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Teenager booked for raping in trichy
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை