Chennai Tamil News: சென்னையிலிருந்து ரயிலில் வெளியூர்களுக்கு செல்வதற்கும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருவதற்கும் மக்கள் அதிகமாக பயன்படுத்துவது எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகும். ஆனால் அவ்விடங்களை தூரம் என கருதும் மக்களுக்கு ஜங்ஷனாக இருப்பது தாம்பரம் ரயில் நிலையம் தான்.
இங்கு வசிக்கும் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளினால் பல மாற்றங்களும் முன்னேற்றங்களும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. அதல் அடுத்த கோரிக்கையாக, தேஜஸ் எக்ஸ்பிரஸ் இனிமேல் தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்வது செயல்படுத்தவுள்ளது.
சென்னை மற்றும் மதுரை இடையே பயன்படுத்தப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்திலும் அதற்கான நிறுத்தம் ஒதுக்குவதற்கான யோசனையை ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது.
நிறுத்தத்தை ஒதுக்க அனுமதி கேட்டு தெற்கு ரயில்வே வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. ரயிலுக்கு நிறுத்தம் ஒதுக்குமாறு வாரியத்தை அணுகியதாக மண்டல மதுரை எம்.பி எஸ்.வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்வதால், ஒரு நிமிடம் ரயிலை நிறுத்த வேண்டும் என்று தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வழக்கமான பயணிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தாம்பரம் பகுதியில் வசிப்பவர்கள் ரயிலில் ஏற எழும்பூர் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் பிரீமியம் ரயிலில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன, மேலும் இந்த தூரத்தை ஆறு மணி நேரத்தில் கடக்கும். இதனால் ரயிலின் வேகம் குறையும் என்ற அச்சத்தில் கூடுதல் நிறுத்தங்களைச் சேர்க்க ரயில்வே அதிகாரிகள் தயங்கினர்.
ஆனால், தற்போது மக்களின் தேவை அதிகரித்ததனால், ரயில்வே வாரியத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றனர். விரைவில் இதற்கான தீர்வு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil