scorecardresearch

தேஜஸ் விரைவு ரயில் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

Chennai-Madurai Tejas Express Special Train : காணொளி மூலம் கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கிய தேஜஸ் விரைவு ரயில் சேவைக்கு ஆதரவும் விமர்சனம்

Tejas Express Special Train review
Tejas Express Special Train review

Tejas Express from Chennai-Madurai : கன்னியாகுமரியில் இருந்து காணொளி மூலம் கொடியசைத்து பிரதமர் மோடி துவக்கி வைத்த தேஜஸ் விரைவு ரயில் சேவைக்கு ஆதரவும் விமர்சனமும் குவிந்து வருகிறது.

சர்வேதேச தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தேஜஸ் ரயில் பெட்டிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்-ல் கடந்த ஆண்டு நவம்பரில் தயாரிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திரமோடி பல நலத்திட்டங்களை தொடங்கி வைக்க மற்றும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கடந்த 1ம் தேதி கன்னியாகுமரி வந்தார். அப்போது காணொளி மூலம் அவர் தேஜஸ் ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

Tejas Express : தேஜஸ் விரைவு ரயிலுக்கு குவியும் பாராட்டும் விமர்சனமும்

வியாழனை தவிர்த்து வாரம் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு இடையே மட்டும் நின்று செல்லும். ஒரு எக்சிகியூட்டிவ் ஏசி சேர் கார் கோச், 12 ஏசி சேர் கார் கோச், 2 லக்கேஜ் கம் பர்த் கோச் என மொத்தம் இந்த ரயிலில் மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு 6 1/2 மணி நேரத்திற்குள் செல்லலாம். இதன் கட்டணம், ஏசி பெட்டிகளில் பயணிக்க 690 ரூபாயும், முதல் வகுப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஆயிரத்து 485 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலின் சேவையை பயன்படுத்தும் ஒரு சில பயணிகள், குறைந்த நேரத்தில் பயணிப்பது பலனளிப்பதாக கூறுகின்றனர். மேலும், பணிக்கு செல்லுபவர்களுக்கு நேரத்தில் செல்ல இந்த ரயில் உதவுவதாகவும் தெரிவிக்கின்றனர். அத்துடன், ஆறரை மணி நேரம் பயணிக்கும் இந்த ரயில், 6 மணி நேரம் பயணமாக சுறுக்கினால் இன்னும் பலனளிக்கும் என்றும் பொதுமக்கள் சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மதுரை-சென்னை இடையே தேஜஸ் ரயில்: என்னென்ன வசதிகள் தெரியுமா?

மேலும் சிலர், இந்த தொகைக்கு ரயிலில் பிரம்மாண்ட வசதிகள் ஒன்றுமில்லை. வழக்கம் போல் தான் இருக்கிறது என்று கூறுகின்றனர். அத்துடன் சதாப்தி போன்ற ரயில்களில் உணவு வழங்கிய பின்னர் குப்பைகளை அகற்றி விடுவார்கள் ஆனால் இந்த ரயிலில் குப்பைகளை அகற்றாமல் வைத்துள்ளனர். இப்படியே போனால் இன்னும் ஓரிரு மாதங்களில் ரயிலின் சுத்தம் காணாமல் போகும் என்றும் விமர்சனம் முன்வைக்கின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tejas express special train review