திருவாரூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.
முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், “சமூக நீதிக்கான வருங்கால நமது போராட்டங்களுக்கு கருணாநிதியின் கொள்கைகள் வழிகாட்டும். கருணாநிதி கடைபிடித்த சமூக நீதி, சமத்துவம் போன்ற கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம்.
திராவிட கருத்தியலை நிலை நிறுத்தியதில் முக்கிய தலைவராக கருணாநிதி விளங்கினார். கருணாநிதியின் கொள்கைகளும் சிந்தனைகளும் இன்றளவும் அவசியமாக இருப்பதை நினைவு கூறவே இங்கு கூடியிருக்கிறோம்.
கருணாநிதியின் சிந்தனைகள் அடுத்தத்தடுத்த தலைமுறையிடம் செல்வாக்கு செலுத்தி வருகிறது. சமூக நீதியை காப்பதில் மிகப்பெரும் பங்காற்றியவர் கருணாநிதி. சாதி ரீதியான வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என வலியுறுத்தியவர் கருணாநிதி. இவரின் ஆட்சிமுறை தேசிய அளவில் பின்பற்றப்படுகின்றது” என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“