சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தனது குடும்பத்தினருடன் தமிழகம் வந்து, திங்கள்கிழமை (டிசம்பர் 13) திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
இதற்கு முன்பு, சந்திரசேகர ராவ், கடந்த 2019-ம் ஆண்டு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இதற்கு முன்பு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினார்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மு.க.ஸ்டாலினுடனான இன்றைய சந்திப்பின்போது தென்னிந்திய மாநிலங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மாநில அரசுகள் ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“