/indian-express-tamil/media/media_files/2025/03/08/oTYr52C0yHJqMaSqfB9R.jpg)
சென்னையில் இன்று முதல் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகல் வெப்பநிலை இன்று (ஏப்.19) முதல் படிப்படியாக உயரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நகரில் வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் ஒரு சில பகுதியில் ஈரப்பதத்துடன் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும் வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை முன்னறிவிப்பு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்து உள்ளார். நகரின் வெப்பநிலை கடற்காற்று வரும் நேரத்தைப் பொறுத்தது. முற்பகலுக்குள் நிலப்பகுதிக்குள் நுழைந்தால், அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக இருக்கும். தாமதமாகி பிற்பகலில் வந்தால், அதற்குள் வெப்பநிலை அதிகரித்திருக்கும்" என்று அவர் கூறினார். ஏப்ரல் மாதத்தில் நகரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 34.7 டிகிரி செல்சியஸ் ஆகும்.
சனிக்கிழமை, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வும் மையம் கணிதத்துள்ளது.
வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 34.3 டிகிரி செல்சியஸ் மற்றும் 35.8 டிகிரி செல்சியஸ், இயல்பை விட 0.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.2 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது. காலை 10 மணியளவில் கடற்காற்றின் வருகை வெப்பநிலையைக் குறைத்தது, ஈரப்பதத்தின் அளவு 70% ஆக இருந்தது.
இந்த வார தொடக்கத்தில் பெய்த கடுமையான மழையால் நுங்கம்பாக்கம் (நகரம்) மற்றும் மீனம்பாக்கம் (புறநகர்) நிலையங்களில் மார்ச் 1 முதல் 6.79 செ.மீ மற்றும் 7.31 செ.மீ பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில், நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 5.59 செ.மீ பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 354% அதிகம். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 9.67 செ.மீ மழை பதிவாகியுள்ளது, இது இயல்பை விட 138 சதவீதம் அதிகம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.