தமிழக கோயில்களில் தரிசனம்: பாரம்பரிய உடை, ஆதார் கார்டு அவசியம்

நுழைவு நேரத்தில், அனைத்து பக்தர்களும் முன்பதிவின் போது பயன்படுத்தப்படும் அதே அசல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

By: Updated: September 2, 2020, 10:08:20 AM

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் தங்கள் வலைத்தளங்களை புதுப்பிக்கத் தொடங்கியுள்ளன. பக்தர்கள் தரிசன நேரங்களை முன்பதிவு செய்ய முன்கூட்டியே இதில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். தரிசன தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்ய ஆதார் கார்டு விவரங்கள் அவசியம்.

திறக்கப்பட்ட கோயில்கள்.. பேருந்து பயணம்.. அன்லாக் பிறகு பழைய நிலைக்கு மாறிய சென்னை!

ஒரு சில கோயில் வலைத்தளங்களில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி, ”பக்தர்கள் கோயில்களைப் பார்க்க பாரம்பரிய உடை மட்டுமே அணிய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், ஆடைக் குறியீடு கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்படாது என கோயில் அதிகாரிகள் கூறினர். ஆனால், கோயில்களுக்கு வரும்போது பக்தர்கள் “ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நவம்பர் 2015-ல், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சின் ஒற்றை நீதிபதி, ஜனவரி 1, 2016 முதல் பக்தர்களுக்கு டிரெஸ் கோடை அமல்படுத்துமாறு மனிதவள மற்றும் சி.இ.யின் கீழ் உள்ள கோயில்களுக்கு உத்தரவிட்டார். இருப்பினும், இந்த உத்தரவு மீது மாநில அரசு கண்டிப்பு காட்டவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தத் தொடங்கிய கோயில்கள் டிரெஸ் கோட் விஷயத்தை வலியுறுத்துவதை நிறுத்தின. பின்னர், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், ஏப்ரல் 5, 2016 அன்று ஒற்றை நீதிபதியின் உத்தரவை ஒதுக்கி வைத்திருந்தது.

சென்னை, மைலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலும், திருவெற்றியூரில் உள்ள ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலும் தரிசன நேரங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான அம்சங்களுடன் தங்கள் வலைத்தளங்களை புதுப்பித்துள்ளன. எந்தவொரு தேதியிலும், அடுத்த வாரத்திற்கு முன்பதிவு செய்யலாம். பக்தர்கள் தரிசனம் செய்ய விரும்பும் தேதி மற்றும் நேரம், பெயர், பாலினம், வயது, மொபைல் எண், முகவரி, மாவட்டம் மற்றும் மாநிலம், ஆதார் அட்டை எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை அதில் குறிப்பிட வேண்டும்.

தரிசனம் முன்பதிவு செய்வதற்கு முன் (கட்டணம் செலுத்தினாலும் சரி, இலவச தரிசனமானாலும் சரி), வழிபாட்டுத் தலங்களுக்கு மாநில அரசு வழங்கிய நிலையான இயக்க நடைமுறைகளின் அடிப்படையில் 16 நிபந்தனைகளுக்கு பக்தர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

நுழைவு நேரத்தில், அனைத்து பக்தர்களும் முன்பதிவின் போது பயன்படுத்தப்படும் அதே அசல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யாமல் கோயிலுக்குள் செல்ல குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயது சான்று வேண்டும். பக்தர்கள் பாரம்பரிய உடையை மட்டுமே அணிய வேண்டும். ஆண்கள் வேஷ்டி-சட்டை,  குர்தா-பைஜாமா, பேண்ட் ஆகிய உடைகளையும், பெண்களைப் பொறுத்தவரை, சேலை, தாவணி பாவடை, துப்பட்டாவுடன் கூடிய சுரிதார் ஆகிவற்றையும் அணிய வேண்டும்.

குழு டிக்கெட்டில் உள்ள அனைத்து பக்தர்களும் ஒன்றாக தரிசனம் செய்ய வேண்டும். தரிசனத்தின் போது பக்தர்கள் எந்த சாமான்கள் / மின்னணு கேஜெட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது.

சட்டுனு செஞ்சிடலாம், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைக்காய் வறுவல்!

முன்பதிவுகள் ஒத்திவைப்பு அல்லது ரத்து செய்யப்பட்டால் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கப்படாது. லேட்டான தரிசனம் அனுமதிக்கப்படாது. 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Temple darshan booking traditional dress code aadhaar card must for devotees

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X