மோடி இன்று தமிழகம் வருகை: ராமேஸ்வரம் கோவில் தரிசனத்திற்கு கட்டுப்பாடு

பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
modi

பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார் இந்த விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே மந்திரி அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் முழுவதும் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  ராமேஸ்வரத்தில் சுமார் 3,500 போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளளர், மண்டபம் முதல் ராமநாதசுவாமி கோவில் வரை சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கோவிலில் இன்று காலை 8 மணி முதல் பிறபகல் 1 மணி வரை பக்தர்கள் நீராடவும், சாமி தரிசனத்திற்கும் அனுமதி இல்லை. பிற்பகல் 3.30 மணிக்கு மேல் பக்தர்கள் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளர்.

Rameshwaram Pm Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: