வரதராஜர் பெருமாள் தேவஸ்தானத்திற்கு காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ள ஸ்ரீ வேதபுரிஸ்வரர் ஸ்ரீ வரதராஜர் பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமானதாக இருக்கும் இடத்தை முன்னாள் அறங்காவலர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அபகரிப்பதை தடுத்து வேண்டும் என்று இன்று சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி, வேதபுரிஸ்வரர், வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முன்னாள் அறங்காவல் குழுவை சேர்ந்த குடும்பத்தினர் முயற்சி செய்துள்ளனர். இந்த சொத்தின் ஆவணங்கள் இந்து சமய அறநிலைத்துறை வாயிலாக 26.05.1988 அன்று அரசு இதழில் வெளிவந்த அறிவிப்பு. பட்டா. நிலவரி திட்ட பதிவேட்டின் சுருக்கம் ஆகியவை (இணைக்கப்பட்டுள்ளது)
முன்னதாக இந்த சொத்தின் மீது அபகரிக்க முயல்வதாக எழுந்த புகாரின் பேரில் புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பு செயலாளர் (கோயில்கள் புதுச்சேரி) இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1972 பிரிவு- 26 G.O No. 38/CH RI/T1/2021 இக்கோயில் சொத்தை பாதுகாக்கவும் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் (HRCOP) கோயில் அதிகாரத்தை குறிக்க வேதபுரிஸ்வரர், வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்தின் செயல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது (நகல் இணைக்கப்பட்டுள்ளது).
ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக செயல் அலுவலர் எந்த நடவடிக்கையும்:எடுக்காததால் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்து அபகரிக்கபடும் நிலையில் இருந்தது. இதற்கிடையில் புதுச்சேரி நிலஅளவிடு மற்றும் பதிவேடுகள் துறையில் தேவஸ்தானத்தின் பெயரை மாற்றிவிட்டு அபகரிக்க முற்படுபவர்களின் பெயரில் சொத்தின் உரிமையை (பட்டா) மாற்ற முயன்றனர். S.P No-7980/DOS/ST-1/E-4/23 (1)/2012 தேதி: 16-02-2017, என்ற உத்தரவின்படி செட்டில்மெண்ட் தீர்வு அதிகாரி இதை நிராகரித்து இதன் மூலம் கோயில் சொத்தை அபகரிக்கும் தெளிவான முயற்சி என்று கூறி அவர்களின் விண்ணபத்தை தள்ளுபடி செய்தார்(நகல் இணைக்கப்பட்டுள்ளது).
நிள அளவை மற்றும் பதிவேடுகள் துறை, அபகரிப்பாளர்களின் பட்டா மாற்ற வேண்டி விண்ணபத்தை தள்ளுபடி செய்ததை இந்து சமய நிறுவனங்கள் துறைக்கு தெரிவித்ததின் காரணமாக அப்போது இருந்த சார்பு செயலர் எண்:4662/இசநி/கோ- 1/2019/916 dated 09.01.2020 அன்று குறிப்பாணை ஒன்றை அனுப்பி அபகரிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து இச்சொத்தை 30 நாட்களுக்குள் தேவஸ்தானம் வசம் கையகபடுத்தும்படி அப்போதைய செயல் அலுவலர்க்கு அறிவுறுத்தப்பட்டது, ஆனால் அப்போது பணியில் இருந்த செயல் அலுவலர் ராஜசேகர் அவர்கள் அபகரிப்பாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அக்குறிப்பாணை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை (நகல் இணைக்கப்பட்டுள்ளது).
இதற்கிடையில் அபகரிப்பாளர்கள் தவறான தகவல்கள் மூலமும், தேவஸ்தான அறங்காவலர்கள் துணையுடனும் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இச்சொத்தை அபகரிப்பாளர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகையால் குறுகிய காலகெடுவிற்குள் இச்சொத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு கோரி கடந்த 15.02.2024 அன்று நான் இந்து அறநிலையத்துறை செயலர் அவர்களுக்கும் மற்றும் 22.04.2024 அன்று துணைநிலை ஆளுநர் அவர்களுக்கும் புகார் மனு அளித்திருந்தேன். அதன்பேரில் இந்து அறநிலையத்துறை செயலர் அவர்கள் கடந்த 13.05.2024 அன்று ஒரு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் முதலமைச்சர் ஒப்புதலுடன் மேற்கண்ட HRI அதிகாரிகள் கோவில் சொத்தை அபகரிப்பாளரிடம் இருந்து மீட்டு அதை கோவில் வசம் ஒப்படைத்து கோவிலுக்கு வருமானம் ஈட்ட வழிவகை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன்படி
அரசு செயலர் அவர்கள் (HRI) இந்து அறநிலையத்துறை ஆணையர் அவர்களை கோவில் சொத்தை உடனடியாக மீட்டெடுத்து கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மேற்படி மீட்டுெக்கும் நடவடிக்கையை 15 நாட்களுக்குள் அறிக்கையாக அவரிடம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அத்தோடு மீட்டெடுத்த மேற்கண்ட உத்தரவு இந்து அறநிலையத்துறை கமிஷனர் அவர்களுக்கு கிடைக்கபெற்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அபகரிப்பாளர்களுக்கு சாதகம் ஏற்படுத்தவும் காலம் கடத்தவும், வேண்டுமென்றே விடுப்பு எடுத்து விட்டு சென்றுவிட்டார். எனவே, அறநிலையத்துறை கமிஷனர் மீது மேற்கண்ட நடவடிக்கை எடுப்பதோடு, அபகரிப்பாளர்களுக்கு துணையாக செயல்பட்ட முன்னாள் செயல் அதிகாரி ராஜசேகர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு கோவில் சொத்தை மீட்டு கோவில் நிர்வாகியிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இதேபோல் வேதபுரிஸ்வரர் தேவஸ்தானத்தின் பல சொத்துகள் பலரால் அபகரிக்கப்படும் சூழல் உள்ளது. குறிப்பாக முதலியார்பேட்டை ஈ.சி.ஆர்-ல் ரயில்வே மேம்பாலம் முதலியார்பேட்டை To அரும்பார்த்தபுரம் செல்லும் புதிய பை -பாஸ் சாலையில் முதலியார்பேட்டை மற்றும் ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள மேற்கண்ட கோவில் சொத்துக்களை அபகரிக்கும் செயல் நடைபெறுவதாக எனக்கு தெரியவருகிறது. அதை தடுத்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க ஆவண செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.