தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயில்களில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 24ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோவில்கள் உள்பட அனைத்து வகையான நடவடிக்கைகளும் முடங்கின. தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், போக்குவரத்து கணிசமாக தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவில்கள் உள்பட அனைத்து மத வழிப்பாட்டுத்தலங்களையும் திறக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழக அரசு, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால், வழிப்பாட்டுத் தலங்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தது.
இந்தச் சூழலில், தற்போது வழிப்பாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுமார் 40ஆயிரம் கோவில்கள் உள்பட அனைத்து மத வழிப்பாட்டுத்தலங்களும் ஜூன் 1ம் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.