இன்று முதல் 3 நாள்... மதுரையில் 10 ரயில்கள் ரத்து! | Indian Express Tamil

இன்று முதல் 3 நாள்… மதுரையில் 10 ரயில்கள் ரத்து!

மதுரையில் இன்று முதல் பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிகளில், பராமரிப்பு பணிக் காரணமாக 10 விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இன்று முதல் 3 நாள்… மதுரையில் 10 ரயில்கள் ரத்து!

ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், மதுரையில் இன்று முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை 10 விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, ‘பகல் 1205-க்கு புறப்படும் திருச்செந்தூர்-பாலக்காடு விரைவு ரயில்(16732) பிப்ரவரி 6,7,8 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. காலை 6 மணிக்கு புறப்படும் பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரயில்(16731) பிப். 7,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

காலை 6.50 மணிக்கு புறப்படும் மதுரை-ராமேஸ்வரம் முன்பதிவில்லாத ரயில் (06651) பிப்.6,7,8 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. பகல் 12.30க்கு புறப்படும் மதுரை-ராமேஸ்வரம் முன்பதிவில்லாத ரயில்(06653) பிப்.6,7,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இரவு 6.10க்கு புறப்படும் மதுரை-ராமேஸ்வரம் முன்பதிவில்லாத ரயில்(06655) பிப். 6, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

காலை 5.40க்கு புறப்படும் ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவில்லாத ரயில்(06652) பிப்ரவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

காலை 11 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவில்லாத ரயில்(06654) பிப்ரவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவில்லாத ரயில்(06656) பிப்ரவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

காலை 8 மணிக்கு புறப்படும் திண்டுக்கல்-மதுரை முன்பதிவில்லாத ரயில் (06609) பிப்ரவரி 6, 7, 8 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மாலை 6:10 க்கு புறப்படும் மதுரை திண்டுக்கல் முன்பதிவில்லாத ரயில் (06610) பிப்ரவரி 6, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

குருவாயூர் சென்னை ரயில் உட்பட 3 முக்கிய ரயில்கள் இன்று மாற்று பாதையில் இயக்கப்பட உள்ளன. இரவு 11:15க்கு புறப்படும் குருவாயூர் சென்னை எழும்பூரில் பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. குருவாயூர் சென்னை எழும்பூற் பிப்ரவரி 6, 7 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறையில் நிற்காது.

காலை 6:15 க்கு புறப்படும் நாகர்கோவில்-மும்பை ரயில்(16340) நாளை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. நாகர்கோவில்- மும்பை ரயில் நாளை மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் நிற்காது. இரவு 9 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம்- குமரி ரயில் நாளை மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது”, என்று தெரிவித்துள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ten express train services canceled from madurai for three days southern railway announcement