இளநீர் வெட்டும் அழகை ரசித்த ராகுல்; சாலையோர வியாபாரிகள் நலன் குறித்து ஆய்வு!

கொள்கை ரீதியாக அவர்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வதாக கூறினார் ராகுல் காந்தி.

கொள்கை அளவில் அவர்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வதாக கூறினார் ராகுல் காந்தி.

Rahul Gandhi :  தமிழகம் மற்றும் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராகுல் காந்தி. கடந்த சில வாரங்களாக தமிழகம், கேரளம், புதுவை என்று பயணித்துக் கொண்டிருக்கும் அவர், பல்வேறு தொழில்கள் செய்யும் நபர்களை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார். சில நேரங்களில் அவர்கள் செய்யும் தொழிலில் ஆர்வமாக பங்கேற்றும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று (28/03/2021)  திருநெல்வேலி தென்காசி சாலையில் அமைந்திருக்கும் ஆலங்குளம் பகுதிக்கு அருகில் உள்ள நல்லூர்விளக்கு பகுதியில் சாலையோரம் இளநீர் வெட்டு முத்துசாமி அவரின் கடையில் இளநீர் வாங்கிக் குடித்தார். அப்போது அவர் இளநீர் வெட்டும் ”ஸ்டைலில்” லயித்த ராகுல் மீண்டும் ஒரு முறை இளநீர் வெட்டித் தரும்படி கேட்டார்.

முத்துசாமியின் குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்த ராகுல், இளநீர் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது, எத்தனை ஆண்டுகள் சண்முகம் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்பு அருகிலேயே நொங்கு விற்கும் வியாபாரிகளின் கடைகளில் இருந்து நொங்கு வாங்கி ருசித்த அவர், அவர்களிடம் வாங்கிய பொருட்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டு, கொள்கை ரீதியாக அவர்களின் முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்வதாக கூறினார் ராகுல் காந்தி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tender coconut cutting method fascinates rahul gandhi in tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com