Advertisment

டெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது! - தமிழக அரசு

முதலமைச்சர் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தலைமை செயலாளர் அல்லது துறை சார்ந்த செயலாளர்கள் அனுமதியளிக்க முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High Court refuses to Restrain NGO Arappor, SP Velumani

Madras High Court refuses to Restrain NGO Arappor

மாநகராட்சி டெண்டர் முறைகேட்டு புகார் குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத் துறை செயலாளர் அனுமதியளித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisment

சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளது. அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி டெண்டர் முறைகேடு குறித்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அளித்த புகாரில் ஆரம்பக் கட்ட விசாரணை நடத்த பொதுத் துறை முதன்மை செயலாளர் அனுமதியளித்துள்ளார். அதன்படி அமைச்சருக்கு எதிராக ஆரம்பக் கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, வழக்கறிஞர் அமைச்சருக்கு எதிரான புகார் குறித்து விசாரணைக்கு அனுமதியளிக்க ஆளுநருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், முதலமைச்சர் கீழ் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த தலைமை செயலாளர் அல்லது துறை சார்ந்த செயலாளர்கள் அனுமதியளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு விசாரணையை தொடரலாம் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court Tamilnadu Minister Sp Velumani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment