Advertisment

தமிழகத்தின் புதிய மாவட்டங்களாகும் தென்காசி, செங்கல்பட்டு! கும்பகோணம் மிஸ்ஸானது எப்படி?

நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu news in Tamil live

Tamil nadu news in Tamil live

நெல்லையை பிரித்து தென்காசியை தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு  தனி மாவட்டமாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனால், தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரிக்கிறது.

Advertisment

இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு 110 விதியின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில், 33 ஆவது மாவட்டமாக விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி என தனி மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தென்காசி, செங்கல்பட்டு என இன்னும் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயமாகின்றன. இதனால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக மாவட்டங்கள் விவரம்:

1)சென்னை

2)கடலூர்

3)காஞ்சிபுரம்

4)திருவள்ளூர்

5)திருவண்ணாமலை

6)வேலூர்

7)விழுப்புரம்

8)அரியலூர்

9)நாகப்பட்டினம்

10)பெரம்பலூர்

11)புதுக்கோட்டை

12)தஞ்சாவூர்

13)திருச்சிராப்பள்ளி

14)திருவாரூர்

15)தருமபுரி

16)கோயம்புத்தூர்

17)கரூர்

18)ஈரோடு

19)கிருட்டிணகிரி

20)நாமக்கல்

21)நீலகிரி

22)சேலம்

23)திருப்பூர்

24)திண்டுக்கல்

25)கன்னியாகுமரி

26)மதுரை

27)இராமநாதபுரம்

28)சிவகங்கை

29)தேனி

30)தூத்துக்குடி

31)திருநெல்வேலி

32)விருதுநகர்

33)கள்ளக்குறிச்சி

34)தென்காசி

35)செங்கல்பட்டு

அதேபோல், கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கையும் வலுத்து வந்தது. தென்காசியுடன் கும்பகோணமும் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றே செய்தியகள் வெளியாகின. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "கும்பகோணத்தை மாவட்டமாக்கும் கோரிக்கையும் வலுவாக இருப்பதால், விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது" என்றார். அப்படி அறிவிக்கப்பட்டால், அதிகாரப்பூர்வ 36வது மாவட்டமாக கும்பகோணம் உருவாகும்.

Chengalpattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment