தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரமாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் நீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை புரிந்தனர். இந்நிலையில், மழை தொடர்ந்து வருவதால் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்தது. பழைய குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பழைய குற்றால அருவியைத் தொடர்ந்து மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்புக் கருதி அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“