தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 7-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தென்காசியில் புகழ்பெற்ற அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா வருகிற 07.04.2025 (திங்கள்கிழமை) அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11.04.2025 (வெள்ளிக்கிழமை) அன்றும் நடைபெற உள்ளது.
இதையொட்டி 07.04.2025 (திங்கள்கிழமை) மற்றும் 11.04.2025 (வெள்ளிக்கிமை) ஆகிய இரு நாட்கள் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மாநில அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்