தென்காசி தெற்கு மாவட்டத்தின் திமுக செயலாளராக இருப்பவர் சிவ பத்மநாபன். இவர், திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசும் காணொலி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
அந்தக் காணொலியில் ரேஷன் கடை பதவிகள் தி.மு.க நிர்வாகிகளுக்கு என்பதை புள்ளி விவரத்துடன் சொல்கிறார்.
மேலும் அவர், மொத்தம் 35தான் இருக்கு. ஆனால் எங்கிட்ட வந்திறுக்கும் விண்ணப்பம் 3500 ஆகும். அதேபோல் நமது மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் எண்ணிக்கை 48.
ஆனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதை ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், சேர்மன் என கட்சியில் இருக்கும் நபர்களுக்கு ஒன்று ஒன்று கொடுத்துள்ளோம்.
தொடர்ந்து கழகத்துக்கு உழைத்த கிளை கழகச் செயலாளர்கள் அவர்களுக்கும் கொடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவரகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/