தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த காளி பாண்டி என்பவர் உணவகத்தில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர் 'எக்ஸ்ரே' எடுக்கக் கூறியுள்ளனர். இதற்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள 'எக்ஸ்ரே' மையத்தில், 'எக்ஸ்ரே' எடுத்துள்ளார். அப்போது எக்ஸ்ரே ரிப்போர்ட் ஃபிலிம்-க்கு பதிலாக, ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்தனர்.
இது குறித்து நோயாளி காளி பாண்டி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது ஃபிலிம் தீர்ந்து விட்டதாக அலட்சியமாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவனைக்கு சென்ற காளி பாண்டி ஜெராக்ஸ் ரிப்போர்ட்டை காண்பித்துள்ளார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/10/lXOP5xAYrtkbrfkQqvO7.jpg)
இந்த சம்பவம் குறித்து தென்காசி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா கூறுகையில், அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கு அனைத்து வசதிகளும் உள்ளது. மேலும் அரசு வழிகாட்டுதலின் படி எக்ஸ்ரே ஃபிலிம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நோயாளிகளின் எக்ஸ்ரே விவரங்கள் டிஜிட்டல் மூலம் சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு இணையத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் அவர்கள் கம்ப்யூட்டரில் அதனைத் தெளிவாகப் பார்த்து நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவது வாடிக்கையாக நடைபெற்று வருவதாகக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“