Advertisment

Tenkasi Lok Sabha Election Results 2024: தென்காசியில் தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 1.9 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீ குமார் 196199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rani srikumar DMK Won

Tenkasi Lok Sabha 2024 Result

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tenkasi Election Results 2024 Live Updates| தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் தென்காசி 37வது தொகுதி ஆகும். இத்தொகுதி, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும்.

Advertisment

தென் மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி இது.

இந்த தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பாக முழுக்க முழுக்க நெல்லை மாவட்டத்துக்குள்ளாக இருந்தது.

அதன்பிறகு, திருநெல்வேலி மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், விருதுநகர் மாவட்டத்தின் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் இணைத்து இந்த தொகுதி உருவாக்கப்பட்டது.

முதல் தேர்தலில் இருந்து 1990கள் வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்தது தென்காசி தொகுதி. 1957, 1962, 1967, 1971, 1977, 1980, 1984, 1989, 1991 என ஒன்பது முறை இங்கு காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அருணாச்சலம் ஆறு முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த தொகுதியில் 90களுக்கு பிறகே தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட்து.

1996ஆம் ஆண்டு தென்காசி தொகுதியில் ஜி.கே மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றது. இக்கட்சி சார்பாகவும் அருணாச்சலமே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பிறகு மூன்று தேர்தல்களில் அதிமுகவும், 2 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றுள்ளன.

2019 மக்களவை தேர்தல் முடிவுகள்

கடந்த 2019 ஆம் நடந்த மக்களவை தேர்தலில், தென்காசி மக்களவைத் தொகுதியில் முதல் முறையாக திமுக வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர் தனுஷ் எம். குமார், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 1,20,286 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்

தென்காசி

கடையநல்லூர்

வாசுதேவநல்லூர் (தனி)

சங்கரன்கோவில் (தனி)

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

ராஜபாளையம்

இவற்றில் தற்போது, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ராஜபாளையம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் திமுக வசமும், கடையநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வசமும் உள்ளன.

வாக்காளர் விவரம்

தென்காசி தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,16,183

ஆண் வாக்காளர்கள்: 7,42,158

பெண் வாக்காளர்கள்: 7,73,822

மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 203

2024 ஆம் ஆண்டு தென்காசி மக்களவைத் தொகுதி: போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள்

தி.மு..- ராணி ஸ்ரீ குமார்

.தி.மு..- DR. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)

பா...- ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்)

நா...- சி.. இசை மதிவாணன்

சுயேச்சைகள் உட்பட 15 பேர் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர்.

தேர்தல் முடிவுகள் 2024

ராணி ஸ்ரீ குமார்- 425679

DR. கிருஷ்ணசாமி- 229480

ஜான் பாண்டியன்- 208825

சி.ச. இசை மதிவாணன்- 130335

இதன்மூலம் தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ராணி ஸ்ரீ குமார் 196199 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

Elections 2024 Tenkasi Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment