TET Exam 2019 : தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இந்திராகாந்தி உள்பட 4 ஆசிரியர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத தங்களை பணி நீக்கம் செய்ய கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
TET Exam 2019 -ல் வெற்றி பெறாதவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஆசிரியர் பணிக்காக சுமார் 60 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். ஆனால், மனுதாரர்கள் வாய்ப்புகள் கிடைத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் உள்ளனர்.
இதனை அனுமதிக்க முடியாது இவர்களை பணி நீக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாமல், ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டர்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில் தகுதி தேர்வு அறிமுகப்படுத்தி 9 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால், தமிழக அவ்வாறு தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற அரசாணை தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இரு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டாலும், அந்த தேர்வில் தமிழக ஆசிரியர்களாகல் கலந்துக் கொள்ளமுடியாது. இதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு ரத்து செய்யவேண்டும். இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தகுதி தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு விளக்க கோரி தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ் மீது எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது. மேலும் வருகிற ஜூன் மாதம் நடைபெறக்கூடிய தகுதித் தேர்வில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என்றும், அதுவரை அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.
வழக்கின் விசாரணை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் அமர்த்தக் கூடாது : சென்னை ஐகோர்ட் உத்தரவு!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.