ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத உள்ள தேர்வர்கள், TRB இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பள்ளிகளில் 1ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வை ( Teacher Eligibilty Test(TET)) எழுதியிருக்க வேண்டும். இந்தாண்டிற்கான டெட் தேர்வு விண்ணப்ப பதிவு, ஆன்லைன் முறையில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியில் இருந்து ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றிருந்தது.
இந்தாண்டிற்கான டெட் தேர்வை எழுதுவதற்கு கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். டெட் தேர்வின் முதல் தாள், ஜூன் மாதம் 8ம் தேதி ( சனிக்கிழமை) காலை 10 மணிமுதல் 1 மணிவரையிலும், இரண்டாம் தாள் ( 9ம் தேதி- ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல்1 மணி வரையிலும் நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த தேர்விற்கான ஹால்டிக்கெட், ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளyfyhmf ( www.trb.tn.nic.in ) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இந்த இணையதளத்தில் இருந்து மட்டும் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தேர்வு தொடர்பான மேலும் தகவல்களுக்கு, 044 - 28272455, 7373008144, 7373008134 இந்த எண்களில் தொடர்புகொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.