Advertisment

பா.ஜ.க-வில் அடுத்த விக்கெட்: அ.தி.மு.க-வில் ஐக்கியமான தடா பெரியசாமி

தமிழ்நாடு பா.ஜ.க மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி, இன்று பா.ஜ.க-வில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Thada Periyasamy BJP joins in AIADMK Edappadi K Palaniswami Tamil News

பா.ஜ.க மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Aiadmk | Edappadi K Palaniswami | Tamilnadu Bjp: தமிழ்நாடு பா.ஜ.க மாநில பட்டியல் அணி தலைவராக இருந்தவர் தடா பெரியசாமி. எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. 

Advertisment

தடா பெரியசாமி சிதம்பரம் தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்த நிலையில், பா.ஜ.க சார்பில் அவருக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு பதிலாக கார்த்திகாயினி பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், தடா பெரியசாமி கடும் அதிருப்தியில் இருந்தது தெரிய வருகிறது. 

இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி, இன்று பா.ஜ.க-வில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில் இணைந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தடா பெரியசாமி அ.தி.மு.க-வில் இணைந்தார்.

ஏற்கனவே பா.ஜ.க-வின் முன்னணி தலைவர்கள் பலர் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில், தற்போது தேர்தல் நேரத்தில் தடா பெரியசாமி அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். அவரது இணைப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தடா பெரியசாமி விலகளால் அண்ணாமலை கடும் அதிருப்தியில் உள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Edappadi K Palaniswami Tamilnadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment