/indian-express-tamil/media/media_files/8TmPsH6f3ya8Th1LLcBG.jpg)
எனது தந்தை குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'தகைசால் தமிழர்' விருது வழங்கி கௌரவித்திருப்பது, மகளாக எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக 2024-ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் வழங்கி கௌரவித்தார். இதற்கு குமரி அனந்தனின் மகளும் பா.ஜ.க மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். இதையடுத்து, தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக 2024-ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார். அத்துடன் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார்.
இதற்கு குமரி அனந்தனின் மகளும் பா.ஜ.க மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Feel happy as a daughter to see My Father's Lifetime hard work dedication and commitments towards the pride of our Tamil language & Tamil soil being honoured by Hon'ble @CMOTamilnadu Thiru.@mkstalin Avl.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) August 15, 2024
மகளாக மகிழ்கிறேன் நன்றி...#KumariAnanthan#ThagaisalThamizharAwardpic.twitter.com/evhG1MnPZG
இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழ் மொழிக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிவரும் எனது தந்தை குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'தகைசால் தமிழர்' விருது வழங்கி கௌரவித்திருப்பது, மகளாக எனக்கு மகிழ்ச்சி தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.