Thai pongal gift from tamil nadu government: தைப் பொங்கலை முன்னிட்டு 1000 ரூபாயுடன் அரசு வழங்கும் இலவசப் பொருட்களின் பட்டியல் இங்கு தரப்படுகிறது. ஒவ்வொரு பொருளின் எடை அளவையும் தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்திருக்கிறது.
தமிழர்களின் திருநாளாக தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் முதல் நாளில் உழவர்களின் தியாகத்தை போற்றும் திருநாளாக தமிழர்கள் இதை கொண்டாடுகிறார்கள்.
பொங்கலன்று புதுப்பானையில் புது அரிசி இட்டு இல்லங்கள் தோறும் முற்றத்தில் பொங்கல் இடுவது தமிழர்களின் பாரம்பரியம். சிறுவர்களுக்கு புத்தாடை, தித்திக்கும் கரும்பு, சர்க்கரைப் பொங்கல் என சந்தோஷத்திற்கு அளவே இருக்காது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும், குறிப்பிட்ட அளவிலான இலவசப் பொருட்களை வழங்குவதை தமிழ்நாடு அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்த ஆண்டு பொங்கல் பொருட்களுடன், 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுகிறது.
Tamil Nadu Government Pongal Gift: சென்னையில் ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு பெற நின்ற கூட்டம்
Thai pongal gift from tamil nadu government, Here the list: பொங்கல் பரிசுப் பொருட்கள் பட்டியல்
பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவற்றை உள்ளடக்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தலைமை செயலகத்தில் 10 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆயிரம் ரூபாயுடன், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. வருகிற 12-ம் தேதி வரை இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.
Read More: பொங்கல் பரிசு வாங்க தயாரா? அதற்கு முன்பு இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்
பரிசுத் தொகுப்பை இன்று அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள், மக்கள் பிரதிநிதிகள் முன்னின்று வழங்கி வருகிறார்கள். இதையொட்டி ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒரு குடும்பம் கூட விட்டுப் போகாத அளவுக்கு அனைத்து குடும்பங்களுக்கும் குறிப்பிட்ட காலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிவிட அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.