scorecardresearch

வடலூரில் 5-ம் தேதி தைப் பூச ஜோதி தரிசனம்: டாஸ்மாக், இறைச்சிக் கடைகள் அடைக்க உத்தரவு

இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை காண சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறும்.

Thai Poosam Jyoti darshan is held on 5th in Vadalur
வடலூரில் 5-ம் தேதி தைப் பூச ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் அவதரித்தவர் அருட்பிரகாச வள்ளலார்.
இவர், வடலூர், சென்னை கருங்குழி ஆகிய ஊர்களில் வாழ்ந்து மேட்டுக்குப்பத்தில் சித்தி பெற்றார்.
அருட்பிரகாச வள்ளலார் பசிப்பிணியை தீர்க்க, வடலூரில் சத்திய தருமசாலையை நிறுவினார்.

இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை காண சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனமும்,
ஆண்டுதோறும் தை மாத பூச நட்சத்திரத்தன்று ஞான சபையில் ஏழுதிரை நீக்கிய ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு 152வது ஆண்டு தைப்பூச விழாவின் சிறப்பாகும், தைப்பூச விழா நேற்று 2ஆம் தேதி வியாழக்கிழமை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலுதோடு தொடங்கியது.

ஜனவரி 31 முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை அருட்முற்றோதல் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்தன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், காலை 7.30 மணி அளவில் வடலூர் தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கு எரிவித்த கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி உயர்த்தப்படுகிறது.

தைப்பூச விழா பிப்ரவரி 5 ந்தேதி காலை ஞானசபையில் காலை 6 மணி, 10 மணி, பகல் ஒரு மணி, இரவு 7 மணி ,10 மணி , மறுநாள் திங்கள் காலை 5 மணி ஜோதி என ஆறு காலங்கள் ஏழு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

தைப்பூச விழா ஞாயிறு கிழமை காலை தருமச்சாலை மேடையில் தைப்பூச விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு பிப்ரவரி 7ந் தேதி செவ்வாய்கிழமை, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது,

திருஅறை தரிசனம் பகல் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது இதன் தொடக்கமாக காலை ஆறு மணி அளவில் 4 சபையிலிருந்து வளர பயன்படுத்தி பொருட்கள் அடங்கிய (பேழை) பெட்டியும், வள்ளலார்உருவப்படமும், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மேளதாளம் முழங்க, வள்ளலார் நடந்து வந்த பாதை வழியே பார்வதிபுரம், நைனார்குப்பம் செங்கால் ஓடை, கருங்குழியில்வள்ளலார் வழிபட்ட விநாயகர் கோயில், தண்ணீரால் விளக்கு எற்றி வைத்த கருங்குழி இல்லம், வள்ளலார் வழிபட்ட பெருமாள் கோவில், இடங்களில் வழியாக ஊர்வலமாக எடுத்துக் கொண்டு, மேட்டுக்குப்பம் வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள சித்தி வளாக திருமாளிகையை அடையும்.

அதற்கு முன்பு, மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் நீராடிய தீஞ்சு சுவை ஓடையில் உள்ள மண்டபத்தில் கருங்குழி ஜெம்புலிங்க படையாட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதனை வரவேற்பார்கள்.

இதேபோன்று, பார்வதிபுரம், நைனார் குப்பம், கருங்குழி ஆகிய கிராமத்தினர்கள், வழி எங்கும் பூ, பழத்தட்டுடன் வரவேற்பார்சன், நிறைவாக மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஊர்மக்கள் திரண்டு வந்து இப்பல்லக்கை வரவேற்பார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி ராஜா சரவணக்குமார், மற்றும்பார்வதிபுரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் ஆகிய கிராம மக்கள் செய்துவருகிறார்கள்.

இந்த விழாவையொட்டி பிராமாண்ட விழா கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன, சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, மேலும் கடலூர் மாவட்ட எஸ்பி தலைமையில் சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தைப்பூச திருவிழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சேகர்பாபு கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
தைப்பூசத்தில் அன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சியை கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thai poosam jyoti darshan is held on 5th in vadalur