அதன் படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இவ்விழாவினையொட்டி பழனி முருகன் கோவிலில் உபகோவிலாக உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜையானது கிராமசாந்தி பூஜை நடைபெற்றது.
இந்நிலையில் வருகின்ற 20 தேதி திருக்கல்யாணமும் இதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான வருகிற 21 தேதி தைப்பூச தேரோட்டமும் நடைபெறுகிறது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு காவடி,வேல் குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களை செய்வார்கள்.இதனை தொடர்ந்து 24 தேதி தெப்ப உற்சவத்துடன் தைப்பூச திருவிழாவானது நிறைபெறுகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு பழனி சிறப்பு ரயில்
பழனி முருகனை வழிப்பாடு செய்ய மதுரையில் இருந்து செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு 20.01.19 & 21.01.19 மதுரை-பழனி சிறப்பு விரைவு ரயில் மதுரையிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு காலை 11.15 மணிக்கு சென்று சேரும். பழனி-மதுரை சிறப்பு விரைவு ரயில் பழனியி லிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மதுரை வரும்.
— DRM MADURAI (@drmmadurai) 18 January 2019
- பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு 20.01.19 & 21.01.19 மதுரை-பழனி சிறப்பு விரைவு ரயில்.
- மதுரையிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு காலை 11.15 மணிக்கு சென்று சேரும்.
- பழனி-மதுரை சிறப்பு விரைவு ரயில் பழனியி லிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மதுரை வரும்.