மதுரையில் டங்க்ஸ்டன் வருவதற்கு துரைமுருகன் டதான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டு வைத்துள்ளதாக,
தமிழக முதல்வருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் கடிதம் அளிப்பேன் என்று மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்ட, நடைபெற்றது. அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான மு.தம்பிதுரை பங்கேற்று பேசினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
“டங்ஸ்டன் கனிம சுரங்கம் தமிழகத்துக்கு வருவதற்கு மு.தம்பிதுரைதான் காரணம் என்றும், நான் இதுகுறித்து மாநிலங்களவையில் பேசியுள்ளதாகவும் என் மீது தவறான தகவலை தமிழக முதல்வா் ஸ்டாலின் கூறியுள்ளாா். தமிழக சட்டப் பேரவையில் நான் உறுப்பினராக இல்லாத நிலையில் என்னை பற்றி பொய் கூறியுள்ளாா். பேரவையில் உறுப்பினராக இல்லாதவா்களைப் பற்றி பேசுவது சட்டப்படி குற்றம். எனவே, அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வரும் 31-ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை கூட்டத்தில் தமிழக முதல்வா் மீது உரிமை மீறல் கடிதம் கொடுப்பேன்.” என்று தம்பிதுரை கூறினார்.
நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய துரைமுருகன், மாநிலங்களவையில் நெய்வேலி சுரங்கம் குறித்துதான் நான் பேசினேன். நெய்வேலியில் போராட்டம் நடைபெறும் சூழ்நிலையில், அங்குள்ள விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினேன்.
டங்ஸ்டன் சுரங்கத்தின் மீது மாநில அரசிற்கே முழு அதிகாரம் உள்ளது. அதில் கிடைக்கும் வருமானமும் மாநில அரசுக்கே சொந்தம் என்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிரச்னையை திசை திருப்புவதற்காக டங்ஸ்டன் விவகாரத்தை கையில் எடுத்து திமுக போராட்டங்களை நடத்தி வருகிறது.
டங்ஸ்டன் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் நான் பேசியபோது அவையில் இருந்த தி.மு.க உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தனா். சுரங்கம் குறித்து மாநில அரசின் கருத்தை மத்திய அரசு கேட்டபோதும் தமிழக அரசு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியது. இதை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிமுக தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவையில் இரண்டு மணி நேரம் பேசினாா். ஆனால், 2 நிடங்கள் கூட அந்த உரையாடல் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள கனிம வளங்களின் மூலம் வருவாய் ஈட்டாமல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று முதலீடு ஈட்டுவதாக தமிழக முதல்வா் கூறுகிறாா். அதன்மூலம் அவா் எத்தனை தொழிற்சாலைகளை தமிழகத்தில் தொடங்கிவிட்டாா். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று அ.தி.மு.க ராஜ்ய சபா எம்.பி தம்பிதுரை கூறினார்.