தாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது

Thamirabarani Maha Pushkaram Celebrations Ends Tomorrow : ஞாயிற்றுக் கிழமை காரணமாக நேற்று மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தாமிரபரணி நதியில் நீராடினர்.

By: Updated: October 22, 2018, 11:19:01 AM

தாமிரபரணி மகா புஷ்கரம் நிறைவு நாள் : நெல்லை மாவட்டத்தில் கடந்த 11 நாட்களாக நடந்து வரும் தாமிரபரணி மகா புஷ்கரம் நாளையுடன் நிறைவடைகிறது. 12 நாட்களில் 12 ராசிக்காரர்கள் தாமிரபரணி ஆற்றிற்கு தீபாராதனை செலுத்தி தங்களின் வேண்டுதல்களை வைத்து புனித நீராடினார்கள்.

அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் என நெல்லைக்கு வருகை தந்து இந்த 12 நாட்களையும் கோலாகல திருவிழாவாக மாற்றியிருந்தார்கள். தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகை கஸ்தூரி என ஒவ்வொரு வரும் இந்த மகா புஷ்கரம் நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் படிக்க கங்கையை விஞ்சும் வகையில் தீபாராதனை

தாமிரபரணி மகா புஷ்கரம் நிறைவு நாள்

நாளை தாமிரபரணி மகா புஷ்கரம் நிறைவு நாள். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வரை சுமார் 143 படித்துறைகள் மற்றும் 64 தீர்த்தகட்டப் பகுதிகள் பக்தர்கள் நீராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நவராத்திரி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த சனி ஞாயிறு விடுமுறைகளில் மேலும் களை கட்டியது நெல்லை மாவட்டம். நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 5 லட்சம் நபர்கள் தாமிரபரணியில் புனித நீராடியுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Thamirabarani maha pushkaram ends today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X