தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தென்சென்னை மக்களவைத் தொகுதி முக்கிய தொகுதியாக கவனம் பெற்றுள்ளது. இங்கு தி.மு.க சார்பில் எம்.பியாக தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் போட்டியிடுகிறார். பா.ஜ.க சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். அதனால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், தமிழச்சி தங்கபாண்டியன் காலில் கட்டுப் போட்டப்பட்டு, கையில் 'வாக்கிங் ஸ்டிக்' உடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு என்ன ஆனது என தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். பலரும் இது தேர்தல் 'தேர்தல் Stunt'-ஆ என விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதுகுறித்து கேள்வி எழுப்பபட்டது.
இதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், "நேற்று வேட்பாளருக்கான கட்டடம் திறக்கும்போது ஸ்லிப் ஆகிவிட்டது. இதனால் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. 3 வாரம் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு ஓய்வு எடுக்க முடியாது. அதனால் வாக்கிங் ஸ்டிக் உதவி உடன் பயணம் செய்கிறேன். ஸ்டிக்குடன் நடக்க யாராவது ஆசைப் படுவார்களா?" எனக் கேட்டு விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“